டக்ளஸ் தேவானந்தா செய்தது துரோகமல்ல; அதுவே நிதர்சனமானது – யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் சுட்டிக்காட்டு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தென்னிலங்கை அரசுகளுடன் தனது இணக்க அரசியலூடாக செய்த சேவைகளும் மக்களுக்கான செயற்பாடுகளும் துரோகமானதல்ல. அதுவே நிதர்சனமானது என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபையின் இவ் ஆண்டுக்கான இரண்டாவது அமர்வு இன்றையதினம் முதல்வர் ஆர்னோல் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய சக்தி திட்டம் மற்றும் கிராமிய எழுச்சி திட்டம் ஆகியன மக்களின் அபிவிருத்தியை மையமாக கொண்டே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவான திட்டங்கள்.
ஆனாலும் இதை எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலத்தில் முன்னெடுத்த போது அது துரோகம் என்று தூற்றினீர்கள். ஆனால் தற்போது அதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தற்போது மேற்கொள்கின்றது.
அந்தவகையில் மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலின் திட்டங்களை நீங்கள் முன்னெடுப்பது துரோகம் இல்லையா என யாழ் மாநகர சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஆர்னோல்ட் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அதையே மேற்கொள்கின்றனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கான சேவையை செய்தபோது அதை யார் துரோகம் என்று சொன்னார்கள். அவர் சொன்னதே இன்று நிதர்சனமாகியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார் .
Related posts:
|
|