டக்ளஸ் தேவானந்தாவுக்கு சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் முருகன் சிலை வழங்கி ஆசீர்வாதம்!

Wednesday, October 19th, 2016

மலேசிய பத்துமலை முருகன் ஆலயத்தில் பூஜிக்கப்பட்ட முருகன் உருவச் சிலையினை சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ இராமச்சந்திரக் குருக்கள் பாபுசர்மா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார்.

கொழும்பிலுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் வாசஸ்தலத்தில் வைத்து முருகனின் உருவச் சிலை இன்றையதினம் (19) கையளிக்கப்பட்டது.

unnamed (2)

மலேசியாவுக்கு ஆன்மீகப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ இராமச்சந்திரக் குருக்கள் பாபுசர்மா பத்துமலை முருகன் ஆலயத்தில் பூஜிக்கப்பட்ட முருகன் உருவச் சிலையினை பெற்றுவந்து அதனை டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்து ஆசீர்வதித்தார்.

உலகிலேயே 140 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய முருகன் சிலை மலேசியாவில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed (1)

 

Related posts:


கடலோரப் பகுதியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையை உருவாக்க ...
யாழ் சிறைச்சாலையிலுள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் நலன் தொடர்பில் ஆளுநர் நடவடிக்கை!
செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது - ஜனாதிபதி ரணில் வ...