ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்பு நடத்த தடை!

Friday, February 8th, 2019

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனியார் வகுப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது சுகாதார வசதிகள், காற்றோட்ட வசதிகள், நகர சபையில் பதிவு செய்தல், இரவு நேர வகுப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது இறுதித் தீர்மானமாக ஞாயிற்றுக்கிழமைகளில் உயர்தர வகுப்புக்கள், சாதாரணதர வகுப்புக்கள், புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய வகுப்புக்கள் தவிர்ந்த அனைத்து வகுப்புகளும் நடத்தப்படக்கூடாது எனவும் வவுனியா நகர சபைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் நகரசபையில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் மாலை 7.30 மணிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களில் எவ்வகையான வகுப்புகளும் நடத்தப்படக்கூடாது, காற்றோட்ட வசதிகள், மலசலகூடங்கள் உட்பட சுகாதார வசதிகள் போதுமான வகையில் ஏற்படுத்த வேண்டுமெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியில் இருந்து இந் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என நகரசபை தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: