ஜூலை முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகள்!

எதிர்வரும் மாதம்முதல் வார நாடாளுமன்ற அமர்வுகளை 4, 5, 6 ஆகிய திகதிகளில் மட்டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை வாய்மூல கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த பிரேரணையின் பிரகாரம் 5 ஆம் திகதி ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் நிறைவு!
பயிற்சிபெற்ற ஆசிரியர்களே எதிர்காலத்தில் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளப்படுவர் ௲ பிரதமர்!
துபாயிலிருந்து நாடும் திரும்பியவருக்கும் கொரோனா - இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா!
|
|