ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை முன்னெடுக்க அனுமதி!
Wednesday, June 10th, 2020
கொரோனா தொற’றை அடுத்து சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய இடைநிறுத்தப்பட்ட மத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை மீளவும் ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 100 மாணவர்களுக்கு உட்பட்ட வகையில் மேலதிக வகுப்புக்களை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை - நிதி இராஜாங்க அ...
சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் நடமாடும் ஆய்வுக்கூட பேருந்துகள் சீனாவினால் அன்பளிப்பு!
இலங்கையில் முதன்முறையாக மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் முழுமையான தொழிற்சாலை!
|
|
|


