ஜப்பான் விசா விண்ணப்பத்திரங்களை கையாள தனியான மத்திய நிலையம்!
Sunday, February 19th, 2017
இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரக அலுவலகம் ஜப்பான் நாட்டுக்கான விசா விண்ணப்பத்திரங்களை கையாளுவதற்கென தனியான மத்திய நிலையமொன்றை அமைத்துள்ளது.
கொழும்பு 03ல் அமைந்துள்ள கீதாஞ்சலி பிளேஸ் என்ற வீதியில் 41/1 என்ற இடத்தில் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கையில் உள்ள ஜப்பான் தூதுவர் கெனெச் சுஹனுமா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தில் ஜப்பான் தூதரகத்திற்கு 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன.
இதற்கமைவாக, ஜப்பானுக்கான விசா அனுமதியைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் தமது விண்ணப்பங்களை இந்த மத்திய நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். தூதரக அலுவலகம் இனிமேல் விசாவுக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சேகரித்தல் மற்றும் விநியோகித்தலுக்காக கண்டி குருநாகல், காலி, புத்தளம், கட்டுநாயக்க, பேலியகொட, பியகம மற்றும் இரத்மலானை ஆகிய நகரங்களிலும் இவ்வாறான மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இந்த இடங்களில் பொறுப்பேற்கப்படும் விண்ணப்பங்கள் கொழும்பு விசாவுக்கான மத்திய நிலையத்திற்கு சமர்ப்பிக்கப்படுமென்று ஜப்பான் தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இங்கிருந்து கிடைக்கும விசா விண்ணப்பங்களின் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
|
|
|


