ஜப்பானுக்குள் உள்நுழைய அனைத்து வெளி நாட்டவர்களுக்கும் தடை – ஜப்பானிய பிரதமர் அறிவிப்பு!
Monday, November 29th, 2021
உலகம் முழுவதும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு பரவி வருவதால், தமது நாட்டின் எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
அதற்கமைய, அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் இன்று 30 ஆம் திகதி நள்ளிரவுமுதல் மறு அறிவித்தல் வரை ஜப்பானுக்குள் உள்நுழைய அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.
முன்னதாக, தென்னாபிரிக்கா மற்றும் அதன் 8 அண்டை நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும், 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதிகளையும் ஜப்பான் அறிவித்திருந்தது.
எனினும், ஒமிக்ரோன் வைரஸ் திரிபு பல நாடுகளில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இந்தப் புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம்!
நாடளாவிய ரீதியாக யானைகளை கணக்கெடுப்பதற்கு திட்டம்!
இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்க...
|
|
|
இந்த மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் முற்கொடுப்பனவு அட்டை - தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!
பல அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள், பொறுப்புக்களை திருத்தி அதிவிசேட வர்த்தமானி வௌனியீடு - ஜனா...
2 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்...


