ஜப்பானிய நிறுவனங்களின் நம்பிக்கையை மீளப் பெற இலங்கை முயற்சிக்க வேண்டும் – கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவிப்பு!
Saturday, February 11th, 2023
ஜப்பானிய நிறுவனங்களின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கான முயற்சிகளை இலங்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காக இலங்கையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தடைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருந்த ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி சன்சுகே, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் கலந்துரையாடிய போது இந்த கருத்தை வலியுறுத்தியதாக ஜப்பானிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு தொடருந்து திட்டத்தை இலங்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ததை ஜப்பானிய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், கடந்த காலத்தில், கற்றுக்கொண்ட பாடங்களைக் கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை இலங்கை சீராக அமுல்படுத்தும் என்று தாம் நம்புவதாக ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


