ஜப்பானின் முன்னாள் பிரதி அமைச்சர் மட் சுஷிதா ஷிம்பே இலங்கை வருகை – ஜப்பான் – இலங்கை இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பலவேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வு!
Sunday, September 18th, 2022
ஜப்பானின் முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மட் சுஷிதா ஷிம்பே இலங்கை வந்தடைந்துள்ளார்.
ஜப்பானிய – இலங்கை நாளுமன்ற நட்புறவு மன்றத்தின் நிறைவேற்று உறுப்பினரான இவர், மூன்றாவது தடவையாக இலங்கை வந்துள்ளார்.
இவர் ஜப்பானின் வெளிநாட்டு உதவி நிறுவனமான ODA நிதியத்தின் தலைவராகவும் செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஜப்பானிய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துதல், உட்கட்டமைப்பு தொடர்பான குறைபாடுகள் மற்றும் தேவையான புதிய வழிமுறைகள், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்களை அவரது விஜயம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


