ஜனாதிபதி வழங்கியுள்ள இலக்கை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – விவசாய அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவிப்பு!
Thursday, July 4th, 2024
விவசாயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள இலக்கை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.
தற்போது கிடைக்கும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்காக தொழில்நுட்ப பொதி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய விவசாய தொழிலுக்கு அப்பால் அதிகரித்து வரும் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பொறுப்பை விவசாய அமைச்சு வெற்றிகரமாக நிர்வகித்து வருகின்றது.
விவசாய துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதன் பலன்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் ஜானக தர்மகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
சர்வதேசப் பொலிஸாரின் ஊடாக உதயங்க வீரதுங்கவை கைது செய்யுமாறு உத்தரவு!
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு பெண் சிப்பாய்கள்!
பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன - ரஷ்...
|
|
|


