ஜனாதிபதி ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ பயணம்!
Sunday, March 12th, 2017
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் ரஷ்யாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தமையினை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாத இறுதி வாரமளவில் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் முகமாக மேற்கொள்ளும் விஜயத்தின் போது சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முக்கிய விடையங்கள் குறித்து அந்நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தையும் நடத்தப்படவுள்ளது.
அத்துடன் யுத்தத்திற்கு பின்னர் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு உட்பட பல சிக்கலான சந்தர்ப்பங்களில் ரஷ்யா இலங்கைக்கு பக்கபலமாகவும், ஆதரவாகவும் செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டக்ளஸ் தேவானந்தாவை நான் நேசிக்கின்றேன் - வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன்! (வீடியோ இணைப்பு)
புதிய மின் கட்டண அதிகரிப்பை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாது - மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம...
5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்ய நடவடிக்கை - சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர...
|
|
|


