5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்ய நடவடிக்கை – சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவிப்பு!

Thursday, September 22nd, 2022

நாட்டில் போசாக்கு வேலைத்திட்டத்தை மிகவும் வலுவுள்ளதாக முன்னெடுக்கும் நோக்கில் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்றுள்ள போசாக்கு மாதத்தை முன்னிட்டு முழு நாட்டையும் உள்ளடக்கிய 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் எடை மற்றும் உயரம் ஆகிய இரண்டிற்கும் அமைவாக வளர்ச்சியை மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (21) நடைபெற்ற போசாக்கு மாதம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் விசேட ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை விசேட வைத்தியர் குறிப்பிட்டார்.

இம்முறை தேசிய போசாக்கு மாதத்தின் தொனிப்பொருள் ‘குறைந்த செலவில் போசாக்கை பாதுகாப்போம். தெளிவை ஏற்படுத்திக் கொள்வோம். முன் மாதிரியாக செயற்படுவோம். உற்பத்தியை மேற்கொள்வோம் பகிர்ந்து கொள்வோம்’ என்பதாகும்.

விசேடமாக தற்பொழுது பிள்ளைகளின் போசாக்கு குறைபாடு தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர் 5 வயதுக்கு குறைவான பிள்ளைகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்வது குறித்து அனைத்து மாவட்டத்திலும் உள்ள  சுகாதார வைத்திய அலுவலக ஊழியர்களுக்கும் இது குறித்து தெளிவு படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் தமது பிரதேசத்தில் எடையை மதிப்பீடு செய்யும் நிலையத்திற்கு அல்லது குடும்ப சுகாதார சேவை அதிகாரியுடன் கலந்துரையாடி எடையை அளவீடு செய்யும் பிரதேசத்தில் சம்பந்தப்பட்ட நிலையத்திற்கு தமது பிள்ளைகளை அழைத்து சென்று வளர்ச்சி நிலையை அறிந்து கொள்வதற்கு பெற்றோர் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: