ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிப்பு – முப்படைகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Monday, April 24th, 2023

2022 ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக இலங்கையின் முப்படைகளின் பிரதிநிதிகள் நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் பிரதிநிதிகள் இருவரும் நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போதும் இராணுவம் விசாரணையில் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பிலான விசாரணைக்காக வேறு ஒரு திகதியை வழங்குமாறு இராணுவம் கேட்டுக்கொண்டதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட போது போதிய அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: