ஜனாதிபதி ரணிலின் தலைமையில் இலங்கை விரைவில் மீண்டெழும் – இலங்கை வந்துள்ள பான் கீ மூன் நம்பிக்கை தெரிவிப்பு!
Wednesday, February 8th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என தான் நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நிலையான பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும் என்ற நம்பிக்கையும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பசுமை வளர்ச்சிப் பாதைக்கான இலங்கையின் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இறுதியாக வருகை தந்ததன் பின்னர் கடந்த ஆறரை ஆண்டுகளில் ஏற்பட்ட அந்த மாற்றங்களை தான் அறிவேன் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் இல்லாமற் போகும்.
உளநலம் பாதிக்கப்பட்டவர்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தவேண்டாம் - தேர்தல் ஆணைக்குழு
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ஸ!
|
|
|


