ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதே பிரதான இலக்கு –  பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாயக்க!

Tuesday, October 31st, 2017

1994 ற்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து ஜனாதிபதி தேர்தல்களின்போதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதே பிரதான இலக்காக இருந்ததுவருகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இது தொடர்பில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களின் காரணமாக நாடு பாதுகாப்பற்ற நிலைக்குச் சென்றது. கிளர்ச்சிகள் மற்றும் மோதல்கள் ஏற்பட்டது மட்டுமன்றி பயங்கரவாதம் ஏற்படுவதற்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையே காரணமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக நிறைவேற்று பிரதமர் பதவி அவசியமில்லை . பாராளுமன்றத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

ராஜபக்சாக்கள் நாட்டை விட்டு தப்பியோடப்போவதில்லை – இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவிப்பு!
யுக்ரைனின் இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தம் - பொதுமக்கள் வெளியேறுவதற்காகவே இந்த நடவடிக்கை எ...
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அடுத்துவரும் வாரங்களில் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் - அமைச்சர் ...