ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராகி வருகின்றது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023

அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மகா போதிக்கு விஜயம் செய்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறி உள்ளார்.

இந்த நிலையில் அமைச்சுப் பதவியை இழந்த ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நியமிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரொஷான் ரணசிங்க கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களினால் அமைச்சர்  பதவியை இழக்க நேரிடும் என்பதை அறிந்நே செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது சரியா தவறா என்பது வெவ்வேறு நபர்களின் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்து ஜனவரிமுதல் கிராமிய மட்டத்திலான தேர்தல் பிரசார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய சம்மேளனம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவ...
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது தேசிய கொள்கை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் - உபகுழுவின் தலைவ...
இரத்மலானையிலிருந்து யாழிற்கான இரு நிறுவனங்கள் விமான சேவை - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்ப...

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் - நாடாளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியும...
அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீத சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நட...
மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என போதிக்கும் மத்திய வங்கி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது -மன்னிப...