ஜனாதிபதி தலைமையில் இராஜகிரிய மேம்பாலம் திறப்பு!
Monday, January 8th, 2018
இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் மக்களின் பாவனைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் நான்கு வழிப்பாதைகளைக் கொண்டதும் அதன் நீளம் 533 மீற்றர்களாகும். இதற்கு 471 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தன.
இராஜகிரிய பிரதேசத்தில் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பலவீனமே ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் - அமைச்சர் ஜீ.எல்....
வடக்கு கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை!
உள்ளூராட்சி தேர்தல் 2023 - கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் இன்று மதியம் 12 அணியுடன் நிறைவு - நாள...
|
|
|


