ஜனாதிபதி இலங்கை திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் — நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, May 27th, 2023

ஜப்பானில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான கடிதத்தை ஜனக ரத்நாயக்கவிற்கு நிதியமைச்சின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை ஜனக ரத்நாயக்க ஏற்றுக்கொண்டதாகவும்நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: