ஜனாதிபதி ஆணைக்குழு – தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இடையே மற்றுமொரு பேச்சுவார்த்தை !

Friday, January 19th, 2024

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் மற்றுமொரு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

இதன் போது தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதில் காணப்படும் தடைகள் தொடர்பாக தொடர்ந்தும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலத்திரனியல் வாக்களிப்பு முறை மற்றும் தபால் வாக்குகளை பயன்படுத்தும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் காணப்படும் நிதி மற்றும் அடிப்படையான தடைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முதன்மையான கவனம் செலுத்தப்பட உள்ளது.

இலத்திரனியல் வாக்களிப்பு முறை நடைமுறையில் இருக்கும் இந்தியா, கனடா, பிரித்தானியா, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளின் தேர்தல் முறையை ஆராய ஆரம்பித்துள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

தேர்தல் சட்டத்திருத்தம் சம்பந்தமாக பொது மக்கள், சிவில் அமைப்புகள் ஆகிய தரப்பில் 50க்கும் மேற்பட்ட யோசனைகளை வழங்கப்பட்டுள்ளன.

அவற்றை ஆராயும் நடவடிக்கைகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பே...
குறிக்கோளுக்கு மாறான கோசங்களுக்கு பின்னால் செல்வது நிறுத்தப்பட வேண்டும் – மே தின உரையில் ஈ.பி.டி.பிய...
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் - ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால...