ஜனாதிபதி அனுதாபம்!

Friday, May 26th, 2017

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் 80 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் களுத்துறை மாவட்டத்தில் அதிகமான மரணம் பதிவாகியுள்ளது. அங்கு 37 பேர் மரணமடைந்துள்ளதோடு, இரத்தினபுரியில் 28 பேரும், காலியில் 11 பேரும், மாத்தறையில் 04 பேரும் உள்ளிட்டதாக நாடு முழுவதும் 80 பேர்  மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று மழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக சுமார் 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகளின் மீட்புப் பணிகளுக்காக விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, இவ்வாறான அனர்த்த நிலைமைகளின் போது உதவிகளை பெற்றுக் கொள்ளும் வகைகயில், 011 2 343 970 எனும் தொலைபேசி இலக்கத்தையும் விமானப்படை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, களனி, கின், நில்வளா கங்கைகளின் தாழ் நில பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துள்ளது.அனர்த்த நிலையை அறிந்து நான் கவலையடைந்தேன். அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்

 

Related posts:


பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்காக தனியானதொரு பிரிவை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை – ஜனாத...
இரணைமடு குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன – தாழ்நில பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு அ...
கடந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் சிறு பகுதி இயற்கையை ஏய்த்துவிட்டது - பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க...