ஜனாதிபதியை சந்திக்கும் தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்கள் !
Monday, August 27th, 2018
சம்பள முரண்பாட்டை நீக்கி தேசிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று(27) வழங்கப்படவுள்ளன,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த ஆணைக்குழுக்கு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அரச நிர்வாக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியான எஸ்.ரணுக்கே இதன் தலைவராக செயற்படுகிறார்.
மொத்த அரச கட்டமைப்பையும் மதிப்பீடு செய்து புதிய சம்பள கட்டமைப்பை தயாரிப்பதே ஆணைக்குழுவின் நோக்கமாகும். இது தொடர்பாக ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.
Related posts:
தாதியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதால் பணிப் புறக்கணிப்புக் கைவிடப்பட்டது!
பல்கலை அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!
வெற்றிகரமாக நிறைவுற்றது வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் புது தில்லிக்கான விஜயம்!
|
|
|


