ஜனாதிபதியின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ள அரசாங்க மருத்துவர்கள் சங்கம்!
Friday, October 14th, 2016
சீஐடி, எப்சீஐடி மற்றும் லஞ்ச ஊழல்கள் எதிர் ஆணைக்குழு ஆகியன அரசியல் நோக்கில் செயற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வரவேற்றுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதியின் குறித்த நிலைப்பாடு, சுயாதீனக் குழுக்களின் செயற்பாட்டுத் தன்மையை அர்ப்பணிப்பை உணர்த்துகிறது என்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த படையினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து அவர்களுக்கு உரிய கௌரவத்தை அளித்துள்ளது.அத்துடன் ஜனாதிபதியின் நிலைப்பாடு, குறித்த நிறுவனங்களின் இறைமையை பாதுகாக்கும்வகையில் அமைந்துள்ளதாகவும் ஹேரத் நேற்று ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு!
உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணி...
காலநிலை மாற்றம் - ஈடுகொடுக்கும் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த குழு - செயற்பாடுகளின் முன்னே...
|
|
|


