ஜனாதிபதிக்கு ஜப்பானில் சிறப்பான வரவேற்பு.!
Thursday, May 26th, 2016
ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நகோயா சர்வதேச விமான நிலையத்தை இன்று சென்றடைந்த ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவையும் தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ மாவட்ட ஆளுநர் ஹிதேகி ஓமோசா உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர்.
இதன் பின்னர் ஜனாதிபதிக்கு நயோகா ஹில்டன் ஹோட்டலில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது.
ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சூரியசக்தியின் மூலம் மின்சாரத்தை பிறப்பிக்கத்திற்கான சட்ட ரீதியான தடைகள் நீக்கம்!
பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்த நடவடிக்கை!
பேருந்துகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் அறிமுகம் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
|
|
|


