ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி? – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
Thursday, December 8th, 2022
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு !
போதுமான இரசாயன உரங்கள் சந்தைக்கு - தேசிய உர செயலகம்!
இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புகள் நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும் - ஒருபோதும் தனிப...
|
|
|


