ஜனவரி 2019 முதல் சாவகச்சேரி பகுதியில் புகையிலைசார் பொருள் விற்பனைக்குத் தடை!

சாவக்ச்சேரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களில் புகையிலை சார் உற்பத்திப்பொருட்ககள் விற்பனை செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளதாக சாவகச்சேரி பிரதேசசபை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து பிரதேசசபை தவிசாளர் தெரிவிக்கையில் பாடசாலைகள், பதிவ செய்யப்பட்ட ஆலயங்கள், விளையாட்டு மைதானங்கள், சிறுவர் பூங்கா, மருத்துவமனைகள் போன்ற இடங்களில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்துக்கு உட்பட்ட வர்த்தக நிலையங்களில் பகையிலைசார் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்வது தடைசெய்யப்பட வேண்டுமென யாழ் மாவட்ட செயலாளரினால் அனுப்பப்பட்ட கடிதத்தை சபையில் ஆராயப்பட்டதையடுத்தே இந்த தடை அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வர்த்தக நிலைய உரிமம் பெறவதற்கு விண்ணப்பிக்கும் வர்த்தகர்கள் மேற்படி புகையிலைசார் விற்பனை செய்யக்கூடாதென அறிவுறுத்தலகள் வழங்க ப்படவுள்ளதுடன் அவ்வாறு விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கே உரிமம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|