ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
Friday, March 1st, 2024
கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் இது கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் பதிவான மாதம் ஒன்றின் அதிகூடிய சுற்றுலாத்துறை வருவாய் என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 269 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானமாக ஈட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கை மேம்படுத்த இருமடங்கு நிதி ஒதுக்கீடு - பிரதமர்!
தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வர்த்தக சந்தை!
தகுதியற்ற 70 அதிகாரிகள் அடையாளம் - தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர...
|
|
|


