ஜனவரியில் நல்லிணக்க வாரம்!
Wednesday, December 27th, 2017
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான ஒரு வார காலம் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான குறிக்கோள் சமாதானத்துடன் கூடிய வலுவான உரையாடல்கள் மாத்திரமின்றி, வளமிக்க தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்புக்களை ஊக்குவித்தல், மக்களிடையே சாந்தி, சமாதானம், அன்பு, கருணை மற்றும் சகோதரத்துவம், ஆகியவற்றை விருத்தி செய்தல், பல்லின மக்களிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையும் உறுதிபடுத்தல் என்பனவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தேசிய நல்லிணக்க வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
இன்று நவராத்திரி விரதம் ஆரம்பம்!
பரீட்சைகளின் போது தரப்படுத்தல்களை வெளியிடாதிருக்க தீர்மானம்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் அரையாண்டில் ஒரு மில்லி...
|
|
|


