ஜனவரிமுதல் மின் கட்டணத்தில் திருத்தம் – பண்டிகை காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் துறைசார் அமைச்சர் அறிவிப்பு!
Wednesday, December 21st, 2022
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை கட்டாயமாக திருத்தியமைக்க வேண்டும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்
இதனிடையே
எதிர்வரும் பண்டிகை காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, டிசம்பர் 24, 25, 26, 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்று மற்றும் நாளையதினம் 2 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை அமுல்படுத்த பொதுப் பயன்பாடு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் நாடு முன்னோக்கிச் செல்லும் - பிரதமர்
நவம்பர் 1 முதல் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாய...
பெரும் போகத்தில், சேதனப் பசளை விநியோகம், பயன்பாடு விளைச்சல் தொடர்பில் ஆராய்ந்து, குறைபாடுகளைத் தீர்க...
|
|
|


