ஜனவரிமுதல் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் 43,000 பாதிப்பு – ஜூலை 25 ஆம் திகதி விசேடடெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம் என சுகாதார சேவைகளளின் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!
Saturday, July 23rd, 2022
ஜனவரி மாதம்முதல் இதுவரையில் 43,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகளளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்தில் மாத்திரம் 8,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும்,, இந்நிலை நீடித்தால் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆய்வுகளின்படி, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்கள் ஆகியவை டெங்கு பெருக்கத்திற்கு அதிக வாய்ப்புள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறான அனைத்து காரணிகளையும் கருத்திற்க் கொண்டு, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 25ஆம் திகதி திங்கட்கிழமை விசேட டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் டெங்கு பரவும் இடங்களை கண்டறிந்து அழிக்கவும், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கவும், டெங்கு ஒழிப்புக்கு பொறுப்பான அதிகாரியின் கீழ் குழுவை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|
|


