ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக இலங்கை சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!
Saturday, January 30th, 2021
ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில் – “ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமானதாகவே காணப்படுகின்றது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச ரீதியான விவகாரங்களில் இலங்கையுடனான அரசியல் உறவுகளை நாம் உயர் மட்டத்தில் பேணி வருகின்றோம்.
மேலும் ரஷ்யாவின் தேயிலை இறக்குமதித் துறையில், இலங்கை பாரிய பங்காற்றி வருகின்றது” எனவும் மரியா ஜாகரோவா மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
அன்று அரசியலுரிமை வேண்டும் என்ற சுமந்திரன் இன்று இயலாமையால் புலம்புகிறார் - பருத்தித்துறை பிரதேச சப...
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறிய 11 பேருந்து சாரதிகள் கைது – பொலிசார் தகவல்!
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!
|
|
|


