சொந்த ஊரில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி!
Monday, February 6th, 2017
தனது சொந்த பகுதியான பொலன்னறுவை லக்ஷ உயனவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விஜயம் மேற்கொண்டார். இதன்போது பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, தனது இளமை கால ஞாபகங்கனை நினைவுபடுத்திக் கொண்டார்.
அவர் சிறு வயதில் வாழ்ந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டதுடன், அங்குள்ள மக்களிடம் நட்பு ரீதியாக உரையாடினார்.
அந்தப் பகுதியிலுள்ள சில்லறைக் கடைக்கு சென்று பொருட்களின் விலைகளைப் பற்றிக் கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள் அங்கிருந்த மக்களுடனும் உரையாடினார்.
தனது சொந்தக் கிராமத்தில் சாதாரண மனிதனாக உலாவிய ஜனாதிபதி, லக்ஷ உயன புகையிரத நிலையத்திற்கும் சென்றார்.
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானவர் என சர்வதேச சமூகத்தினால் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு விஜயங்களின் போதும் அவரின் செயற்பாடு பல அரச தலைவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கும்.
இந்நிலையில் ஜனாதிபதியின் நேற்றைய பொலநறுவை விஜயம், அவரின் மற்றுமொரு எளிமையை நாட்டுக்கும் உலகத்துக்கும் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

Related posts:
|
|
|


