சேவை ஒப்பந்த மீறல் – 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான அனுமதி இரத்து!
Sunday, November 27th, 2022
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சேவை ஒப்பந்த மீறல்கள் தொடர்பாக வேலை தேடுபவர்களிடமிருந்து பணியகத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி, தீர்வுகளை வழங்க முன்வராத தொழில் முகவர் நிலையங்களும் பணியகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறியுள்ளன.
மேலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டும் மற்றும் நீதிமன்றத்தைத் தவிர்த்தல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டும் அவ்வாறான தொழில் முகவர் நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தொடர்ந்தும் இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி வழங்கும்!
தைப்பொங்கல் தினத்தன்று நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிப்பு!
|
|
|


