சேவையிலிருந்து விலகிய 10,000 தனியார் பேருந்து ஊழியர்கள் – அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!
Saturday, January 1st, 2022
சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது 50 சதவீதமளவில், நாடளாவிய ரீதியில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால் பேருந்து சேவையாளர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது வரையில் சுமார் 10 ஆயிரம் சேவையாளர்கள் சேவையிலிருந்து விலகி, வேறு தொழில்களை நாடியுள்ளனர்.
இதன் காரணமாக, தனியார் பேருந்து தொழில்துறை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலைகள் முழுமையாக இயங்க வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல...
கலாசாலையில் சிறப்புற இடம் பெற்ற ஆசிரியர் தினம் - கலாசாலை தாயே என்ற இசைப் பேழையும் வெளியீடு!
|
|
|


