சேனா படைப்புழு ஒழிப்பு – நிதி ஒதுக்குமாறு பிரதமர் பணிப்புரை!
சேனா படைப்புழுக்களை ஒழிப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தப் புழுவை அழித்தல் மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கல் என்பது தொடர்பில், வாரந்தோறும் எழுத்துமூலம் அறியத்தருமாறு, விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசனுக்கு, பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
சேனா படைப்புழுவை ஒழிப்பதற்காக, இதுவரையில் ஐந்து வகை இரசாயனப் பதார்த்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த இரசாயனப் பதார்த்தங்களை, மனித சுகாதாரத்துக்கு பாதிப்பற்ற வகையில் பயன்படுத்த வேண்டுமென்று அமைச்சர் கோரியுள்ளார்.
Related posts:
மாலிங்க வழங்கிய பணத்தில் மோசடி!
வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!
புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன்னர் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...
|
|
|


