சேதமடைந்தும் கண்டுகொள்ளப்படாத கந்தர்மடம் சந்தி தபால் பெட்டி !
Tuesday, December 4th, 2018
தபால் பெட்டிக் கதவின் பூட்டு வேலை செய்யாத நிலையை அறியாது பொதுமக்கள் அதனுள் தபால்களைப் போட்டுவிட்டுச் செல்கின்றனர். கதவு சேதமடைந்தமை குறித்துத் தபால்த் திணைக்களம் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்று பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் சந்தியில் உள்ள தபால் பெட்டியே இவ்வாறு சீர்கேடாகவுள்ளது. அந்தப் பெட்டி இன்றுவரை பயன்பாட்டில் உள்ளபோதும் அதன் சேதங்களைச் சீரமைக்கவில்லை. பொதுமக்கள் தபால்களை அந்தத் தபால் பெட்டியில் போட்டுச் செல்கின்றனர். தபால்த் திணைக்கள ஊழியர்கள் தம்வசம் உள்ள திறப்பைக்கொண்டு அதற்குள்ளிருக்கும் தபால்களை எடுத்துச் செல்வது வழமை.
தபால் பெட்டி பாதுகாப்பற்ற முறையில் சாதாரணமாக எவரும் திறந்து சாத்தும் தன்மையுடனேயே காணப்படுகின்றது. ஒருவர் போட்டுச் செல்லும் தபாலை ஏனையவர்கள் எடுக்க வாய்ப்புள்ளது.
எனவே நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ‘‘இந்த தொடர்பில் உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வடக்கு மாகாண பிரதித் தபால்மா அதிபர் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


