சேதப்படுத்தப்பட்ட நாணயங்களுக்கு மாற்றீடுகள் வழக்கப்படமாட்டாது!

சேதப்படுத்தப்பட்ட, மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களுக்கு 2017.12.31 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவுகள் எதனையும் மேற்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாணயத் தாள்களை சேதப்படுத்தல், அதில் மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றாக கருதப்படும்.
அவ்வாறான செயற்பாடுகள் சிறைதண்டனை, அபராதம் அல்லது இரண்டு விதமான தண்டனைகளையும் ஏற்கவேண்டிய நிலை தோன்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நாணயத் தாள்களை வைத்திருப்பவர்கள் அத்தகைய நாணயத் தாள்களின் முகப்புப் பெறுமதியை இழப்பதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாக நேரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகளில் இருந்து பொதுமக்களை விலகியிருக்குமாறு ஆலோசனை வழங்கப்படுவதுடன், இலங்கை மத்திய வங்கி, பாதிப்புக்குள்ளான நாணயத்தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்களினூடாக மாற்றிக் கொள்ளுமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்
Related posts:
|
|