செல்பி காரணமாக கடந்த 8 மாதத்தில் 24 பேர்பலி!
Friday, October 20th, 2017
வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களில் 24 இளைஞர், யுவதிகள் உயிரிழந்திருப்பதாக வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
வருடாந்தம் ரயிலில் இடம்பெறும் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2016ஆம் ஆண்டில் ரயில் பாதையில் சென்றதினால் ரயிலில் மோதுண்ட 436 பேரில் 180 பேர் உயிரிழந்துள்ளனர். 256 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.
ரயில் குறுக்கு பாதைகளில் வாகனங்களுடன் ரயில் மோதியதினால் 84 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ரயிலில் பயணிக்கும் போது குடிபோதையில் தவறிவிழுந்த 76பேர் கடந்தவருடம் உயிரிழந்துள்ளனர்.
Related posts:
இந்திய அரசாங்கத்தின் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ்.பொதுநூலகத்திற்கு அருகில் கலாசார மையம்: பணிகளை ...
போலியான தகவல்கள் பரவுகிறது - இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை!
கடந்த 24 மணிநேரத்தில் 762 கொரோனா தொற்று: கொழும்பில் மட்டும் 445 பேர் அடையாளம்!
|
|
|


