செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப்பேரவைக்கான வரைபுச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக வடக்குச் சமூகத்துடனான கலந்துரையாடல்

Wednesday, June 7th, 2017

செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப்பேரவைக்கான வரைபுச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக வடக்குச் சமூகத்துடனான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் -08 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை-03 மணி முதல் யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

இலங்கை அரசு செய்தி ஊடகங்களிற்கான சட்டமொன்றை அமுல்படுத்த  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யாழ். ஊடக அமையம், ஊடக மறுசீரமைப்பிற்கான செயலகம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கைகள் பிரிவு இணைந்து  இக்கருத்துக் கேட்கும் அமர்வை முன்னெடுக்கவுள்ளன.

ஊடகங்கள் மற்றும் பெறுநர்களுக்கான உரிமைகள் தொடர்பிலான இக்கருத்து கேட்கும் அமர்வினில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், ஊடக அமைப்புக்களது பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள்,பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களினை சேர்ந்தோர் பங்கெடுத்துத் தங்களது  கருத்துக்களினை வெளிப்படுத்த முடியும்.

ஏற்கனவே தென்னிலங்கையின் மாகாண ரீதியாக கருத்துக்கேட்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும் தமிழர் தரப்புக்களின் கருத்துக்களைப்  பெற்றுக்கொள்ளும் முதலாவது அமர்வாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கருத்து கேட்கும் நிகழ்வில் மேற்குறிப்பிட்ட அனைவரையும் தவறாது  பங்கெடுக்குமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: