செய்தியாளர்களுக்கு வட்டியற்ற கடன் வசதி!
Friday, November 11th, 2016
வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகள் அமைக்க 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்சிறிய மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு 5 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 25,000 வீடுகளை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை. 15 ஆண்டுகளுக்கு மேலாக அரச குடியிருப்புகளில் தங்கியிருப்போருக்கு அந்த வீடுகளில் தொடர்ந்தும் வசிக்க அனுமதி வழங்கப்படும்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட பிராந்திய செய்தியாளர்களுக்கு 100 சதவீத வட்டியற்ற 3 இலட்சம் ரூபா கடனை பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் எனவும் இன்றைய வரவு செலவு திட்ட உரையில் நிதியமைச்சர் தெரிவித்தார்.

Related posts:
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து வசதி!
கைவிரல் அடையாள நடைமுறையை எதிர்த்து வவுனியாவில் வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்!
பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
|
|
|


