செயற்கை முட்டை பாவனையில் – உடன் முறையிடுமாறு மக்களிடம் கோரிக்கை!
செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகங்கள் எவர்மீதாவது ஏற்படின் உடனடியாக, அந்தந்த பிரதேச பொதுப் பரிசோதகர்களிடம் முறையிடுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்பதாக வவுனியாவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு உண்ண சென்ற ஒருவர் பரிமாறப்பட்ட முட்டையின் தன்மை தொடர்பில் சந்தேகம் கொண்டு அது தொடர்பில் பொது சுகாதார பகுதிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த செயற்கை முட்டை பயன்படுத்தப்பட்டமை வெளிச்சத்தக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மஹா சிவராத்திரியை முன்னிட்டு புனிதத்தைப் பேணுமாறு இந்து சமயத் தலைவர்கள் வேண்டுகை!
தாமதங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை – நீதி அமைச்சர்!
தவறிழைத்த மாணவர் தொடர்பில் மாணவர்களுக்கு விடுகைப்பத்திரம் வழங்குவது வரம்பு மீறலாகும் - இலங்கை மனித உ...
|
|
|


