செயன்முறை பரீட்சை பெறுபேறு இன்றி 2 இலட்சத்து 36 ஆயிரத்து 53 பேர் உயர் தரத்துக்கு தகுதி – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

2020 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்றி, 2 இலட்சத்து 36 ஆயிரத்’து 53 பேர் உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக அவதானிக்கையில், அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்படாவிட்டாலும், பாடசாலை மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் உயர் தரம் கற்பதற்காக 75.1 சதவீத மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர்.
அதாவது 2 இலட்சத்து 31 ஆயிரத்து 458 மாணவர்கள் உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில், முழுமையான விண்ணப்பதாரிகளுடன் அவதானிக்கையில், 2 இலட்சத்து 36 ஆயிரத்து 53 பேர் அதாவது 73.6 சதவீதமானோர் உயர் தரத்திற்கு தகுதிபெற்றுள்ளனர்.
இதேநேரம் அழகியல் பாடநெறிகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர், சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். எவ்வாறிருப்பினும், இவை அனைத்தும் சாதகமான நிலையிலேயே இருக்கின்றன.
நூற்றுக்கு நூறு வீதம் பெறுபேற்றை வழங்க முடியுமானால், அது மிகவும் முக்கியமானதாகும்.
காரணங்கள் இல்லாது எவருக்கும் பெறுபேற்று சான்றிதழ் வழங்கப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|