செயன்முறை பரீட்சைகளில் பங்குக்கொள்ள முடியாதோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு – பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

Saturday, May 7th, 2022

நேற்றையதினம் இடம்பெற்ற கல்விபொதுத் தராதர உயர்தரப்பரீட்சையின் நடனக்கலை மற்றும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடவிதானங்களுக்கான செயன்முறை பரீட்சைகளுக்கு பங்குக்கொள்ள முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் பொது நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், குறித்த பரீட்சையில் தோற்ற முடியாத நிலை பரீட்சார்த்திகளுக்கு ஏற்பட்டது.

இதன்காரணமாக, இன்றையதினம் குறித்த பரீட்சார்த்திகள், தங்களுக்கு உரித்தான பரீட்சை மண்டபங்களுக்கு சென்று, அதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: