செப்டெம்பர் 13  முதல் 30  வரை ஐ. நா. மனித உரிமைப் பேரவையின்  33 ஆவது கூட்டத் தொடர்!

Thursday, August 18th, 2016

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்  33 ஆவது கூட்டத்  தொடர் எதிர்வரும்   செப்டெம்பர் மாதம்  13 ஆம் திகதி முதல்  30 ஆம்  திகதி வரை ஜெனிவாவில்  நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

குறித்த 33 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த  உத்தியோகபூர்வமான   அமர்வுகளோ விவாதங்களோ நடைபெறாவிடினும்  இலங்கை தூதுக்குழுவினால்  இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த  அறிக்கை ஆவணம் ஒன்று தாக தெரிவிக்கப்படுகின்றது.

இது  தொடர்பான  ஏற்பாடுகள்  ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர்    ரவிநாத ஆரியசிங்க   தலைமையிலான தூதுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.  அத்துடன்  33 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில்  ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர்    ரவிநாத ஆரியசிங்க    உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts:

இயல்பு நிலையை கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் வர்த்தமானி - பிரத பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன!
பால்மாவின் விலையை அதிகரிக்க ஒருபோதும் அனுமதியளிக்கப்படாது – போதுமான பால் கையிருப்பில் உள்ளது என அமைச...
எரிபொருள் நாட்டுக்கு வரும் வரை வரிசையில் காத்திராதீர்கள் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வேண்ட...