செப்டெம்பர் 13 முதல் 30 வரை ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர்!
Thursday, August 18th, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
குறித்த 33 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த உத்தியோகபூர்வமான அமர்வுகளோ விவாதங்களோ நடைபெறாவிடினும் இலங்கை தூதுக்குழுவினால் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கை ஆவணம் ஒன்று தாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான ஏற்பாடுகள் ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான தூதுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அத்துடன் 33 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
பசுபிக் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் அருகே இலங்கைக் கடற்படைக்க பயிற்சி!
வெற்றிடமாகவுள்ள தபாலதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளைமறுதினம்!
|
|
|


