சென்னை – யாழ்ப்பாணம் விமான சேவை வெற்றியளித்துள்ளது – சுற்றுலாத்துறை மகிழ்ச்சி தெரிவிப்பு!
Monday, January 2nd, 2023
சென்னைக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையேயான விமான சேவைகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது சிறந்த பலனை தந்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முதலீட்டு நடவடிக்கைகளுக்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விமான சேவையின் போதும் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஆசன பதிவு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வாரத்திற்கு நான்கு சேவைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அதிக அளவில் இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அதிக கட்டணத்தை அறவிடும் பேருந்துகள் மீது நடவடிக்கை!
ஜி.எஸ்.பி பிளஸ் : ஐரோப்பிய ஒன்றியக்குழுவொன்று இலங்கை விஜயம்!
முதலில் நாம் வாழ வேண்டும், பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து சிந்திக்கலாம் – கிடைக்கின்ற தடுப...
|
|
|


