சென்னை சென்ற விமானங்கள் கட்டுநாயக்காவில் தரையிறக்கம்!

Monday, December 12th, 2016

டுபாய் விமான நிலையத்திலிருந்து சென்னை சென்ற ஐக்கிய அரபு இராச்சியத்தின் எமிரேற்ஸ் விமான சேவைக்குரிய விமானம் ஒன்று ‘வர்தா’ புயல் காரணமாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றும் இவ்வாறு மீண்டும் கட்டுநாயக்கா திரும்பியுள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் இன்று (12) பிற்பகல் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னைக்கு 180 கி.மீ துரத்தில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் மேற்கு திசை நோக்கி 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகலில் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் போது 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் 36 மணி நேரத்திற்கு கடும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

bandaranaike_international_airport

Related posts: