செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவில் சிறுநீரக நோய்த்தாக்கம் அதிகரிப்பு!

Friday, May 5th, 2017

வவுனியாமாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேசசெயலர் பிரிவில் சிறுநீரகநோய்த்தாக்கத்திற்க இலக்கானநால்வர் உயிரிழந்தள்ளதாகவும், இதற்கஅந்தப் பகுதிமக்கள் பாவிக்கும் குடிநீரேகாரணமாகும் எனறும் வைத்தியசாலைவட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வவுனியாமாவட்டம் செட்டிகுளம் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்டதட்டான்குளம் கிராமத்திலேயே சிறுநீரக நோய்த் தாக்கத்திற்கு இலக்காகிஒன்றரைமாதத்திற்குள் நான்குபேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாககுறித்தகிராமத்தில் வாழ்வதற்குமக்கள் அச்சம் தெரிவித்துவருகின்றனர்.

நாட்டின் அசாதாரணசூழல் காரணமாக 1995 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்திருந்தவடபகுதியைச் சேர்ந்தமக்கள் அனைவரும் வவுனியாபூந்தோட்டம் மற்றும் நெளுக்குளம் போன்றநலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் 2006 ஆம் அண்டு இம்மக்கள் தட்டான் களம் பகுதில் மீளக்குடியேற்றப்பட்டனர்.

அன்றிலிருந்து சிறுநீரகநோய்த் தாக்கத்திற்குமக்கள் இலக்காகிவருவதாகவும், கடந்த 45 நாட்களில் நால்வர் உயிரிழந்துள்ள தாகவும்,பலர் இந்நோய்த் தாக்கத்திற்கு இலக்காகியுள்ள நிலையில் வைத்திசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவிடயம் தொடர்பில் மக்கள் பலதரப்பினரிடமும் முறைப்பாடுகளைச் செய்துள்ளபோதிலும், இதவரையில் எந்தத் தீர்வுகளும் கிடைக்கவில்லையென்றும், இதன்காரணமாக குறித்த பகுதியிலிருந்து வெளியேறதீர்மானித்து இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நாடளாவியரீதியில் 55 பிரதேசசெயலர் பிரிவுகளில் சிறுநீரகநோயின் அதிகரித்திருப்பதாகவும்  இதில் அனுராதபுரமாவட்டத்தில் மட்டும் 22 பிரதேசசெயலர் பிரிவுகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: