சுவாசம் நோய் உள்ள வாக்காளர் இறுதி சில மணி நேரத்திலேயே வாக்களிக்க வேண்டும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

சுவாசம் தொடர்பான நோய் உள்ளவர்கள் மற்றும் காய்ச்சல் உள்ள வாக்காளர் இறுதி சில மணி நேரத்திலேயே வாக்களிக்க வேண்டும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட கொரோனா வழிக்காட்டல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வாக்களார்களின் வாக்களிப்பு நடவடிக்கைக்கு தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்கள் கையுறைகளை நீக்கிவிட்டு சவர்க்காரமிட்டு கை கழுவுவது கட்டாயமாகும்.
வாக்குகளை குறியிடும் பெட்டிகள் மற்றும் வாக்களிக்கும் நிலையத்தை ஒரு மணித்திலாயத்திற்கு ஒருமுறை கிறுமி நாசினி தெளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் நிலையத்தில் இருந்து வெளியேறிய பின்னர் சவர்க்காரமிட்டு கைகளை கழுவ வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உரிய பதிலளிக்காவிடில் விரைவில் வேலை நிறுத்தம்!
இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபன தலைவர் வாழ்த்து!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 14 பேர் மரணங்கள்பதிவு - ஒருவரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நி...
|
|