சுற்றுலா துறையினருக்கு எரிபொருள் வழங்க புதிய வேலைத்திட்டம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை!

சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்காக சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இராணுவத்தினருடன் ஒத்துழைப்புடன் புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக் கொண்டு தங்களது பயண விபரங்களை வழங்க வேண்டும்.
இதனையடுத்து, அவர்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்குள் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து குவியவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தை விட இந்த மாதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|