சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !
Tuesday, April 2nd, 2024
சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்
இதேவேளை அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி 6-15 இருக்கைகள் கொண்ட வேன்கள் (மின்சார மற்றும் ஹைபிரிட் உட்பட) மற்றும் 16-30 இருக்கைகள் கொண்ட மினிபஸ்கள் மற்றும் 30-45 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விஷேட வட்டிக்கான வைப்பு தொகை அதிகரிப்பு!
அடையாள அட்டை வழங்க விசேட குழு நியமனம்!
கொவிட் - 19 A வகையான வைரேஸ் தொற்றே இலங்கையை தாக்கியுள்ளது – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவி...
|
|
|


